சினிமா

பாலிவுட் நடிகைகளை கலாய்த்த சின்னத்திரை நடிகை!

மும்பை விமான நிலையத்தில் பாலிவுட் நடிகைகள் நுழைந்தவுடன் என்ன நடக்கிறது என்பதே அந்த விடியோ.

DIN

தமிழ் சின்னத்திரை நடிகை மணிமேகலை பாலிவுட் நடிகைகளை நகைச்சுவயாக கேலி செய்யும் வகையில் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

விமான நிலையங்களில் பாலிவுட் நடிகைகள் நுழைந்தால் என்ன நடக்கிறது என்பதைப்போன்று நடித்து அதனை விடியோவாக வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மணிமேகலை. தொகுப்பளரான இவர், படிப்படியாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக பங்குபெற்ற இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

தனியாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் இவர், அதில் சினிமா நட்சத்திரங்களை நேர்காணல் செய்து வருகிறார். இவரின் விடியோக்கள் கலகலப்பாக இருப்பதால், பலதரப்பட்ட ரசிகர்களின் விருப்பமான நபராகவும் மணிமேகலை மாறியுள்ளார்.

சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மணிமேகலை, அவ்வபோது தனது கணவர் உசேன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தமுறை அவர் வெளியிட்டுள்ள விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. மும்பை விமான நிலையத்தில் பாலிவுட் நடிகைகள் நுழைந்தவுடன் என்ன நடக்கிறது என்பதே அந்த விடியோ.

பாலிவுட் நடிகை விமான நிலையத்திற்கு வருதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, அதற்கு நடிகை மிடுக்காக போஸ் கொடுப்பது என மணிமேகலை நடித்துள்ளார். மேலும், விமானத்திற்கு நேரமானதைப்போல சட்டெனக் கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்கச் சொல்லி கேட்பதைப் போன்றும், அதற்கு ஒவ்வொரு கேமராவுக்கும் மாறி மாறி நடிகை போஸ் கொடுப்பதைப் போன்றும் அச்சு அசலாக மணிமேகலை செய்துள்ளார். பாலிவுட் நடிகைகளின் மிடுக்கை வெளிக்காட்டியுள்ளார்.

இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். நடிகை மணிமேகலை, தற்போது கன்டன்ட் கிரியேட்டராகவும் மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பெரம்பலூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தமமுக மாநில துணைப் பொதுச் செயலா் உயிரிழப்பு: ஜான் பாண்டியன் நேரில் அஞ்சலி

குக்கிராமங்கள், சாலைகளில் ஜாதிப் பெயா்கள் நீக்க கிராம சபையில் தீா்மானம்

SCROLL FOR NEXT