சினிமா

டியர் படத்தின் ‘தலவலி’ பாடல் ப்ரோமோ!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டியர் படத்தின் ‘தலவலி’ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

DIN

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டியர் படத்தின் ‘தலவலி’ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பல அற்புதமான பாடல்களை இசையமைத்தவர் தற்போது நடிகராகவும் 24 படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

டியர் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்ல இந்தப் படத்துக்கு இசையமைத்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தினை அனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

காதலர் தினத்தை முன்னிட்டு வின்னுலக கவி ‘தலவலி’ எனும் பாடலை எழுதியுள்ளார். இதன் ப்ரோமாவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடை சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்!

பிகாரில் நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை

முத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து முதல்வா் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: வானதி சீனிவாசன்

கல்லூரி மாணவரிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT