FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் புடிக்கலே புடிக்கலே பாடல்!

புடிக்கலே புடிக்கலே பாடல் இணையத்தில் வைரல்.

5 பிப்ரவரி 2026, 3:49 pm IST
புடிக்கலே புடிக்கலே பாடல் காட்சி
பகிர்:

பூக்கி படத்தில் இடம்பெற்றுள்ள புடிக்கலே புடிக்கலே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் “பூக்கி”.

இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகின்றார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

பூக்கி படத்தில் நாயகியாக தனுஷா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சுனில், பாண்டியராஜன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படம் வரும் பிப். 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பூக்கி படத்தின் புதிய பாடலான புடிக்கலே புடிக்கலே பாடல் இன்று(பிப். 5) இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலை சந்தோஷ் ஹரிஹரன், ருக்சார் பந்துகியா ஆகியோர் பாடியுள்ளனர். வரிகளை லவரதன் எழுதியுள்ளார்.

இரு காதலர்களுக்கிடையே நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து பூக்கி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The song 'Pudikkale Pudikkale' from the movie 'Pookki' is going viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments