கயாது - துல்கர் நடித்த படத்தின் முதல் பாடல் வெளியீடு!
கயாது - துல்கர் நடித்த படத்தின் முதல் பாடல் வெளியானது பற்றி...
கயாது - துல்கர் நடித்த படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை (ஆக. 10) வெளியானது.
மலையாளத்தில் ’ஆர்டிஎக்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாகவும் கயாது லோஹர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ’ஐ ஆம் கேம்’.
சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை துல்கர் சல்மானே தயாரிக்கிறார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ’அருகே அருகே’ இன்று வெளியானது.
மேலும், இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The first song from the movie starring Dulquer was released on Monday (Aug. 10).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.