கிஷன் தாஸ் நடிக்கும் சீ யூ படத்தின் பாடல் வெளியீடு!
கிஷன் தாஸ் நடித்துள்ள ’சீ யூ’ திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
கிஷன் தாஸ் நடித்துள்ள ’சீ யூ’ திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
’முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி கவனம் பெற்றவர் நடிகர் கிஷன் தாஸ். இவர் நடிப்பில் வெளியான ’ஆரோமலே’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவத்சன் இயக்கத்தில் ’சீ யூ’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிகர் கிஷன் தாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக லப்பர் பந்து, டிசி படங்களின் நாயகி சஞ்சனா நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
எம் எஸ் பாஸ்கர், அருண் குமார், அக்ஷயா, கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் ஸெனம் இசையமைத்துள்ளார்.
சீ யூ திரைப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் பாடல் முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏகாந்தம்’ இன்று வெளியாகியுள்ளது.
இப்பாடலை, ஒன்ஸ் மோர் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன், வாகீசன் ராசய்யா ஆகியோர் பாடியுள்ளனர்.
சீ யூ திரைப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Song release of the movie 'See You', starring Kishan Das!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.