தனுஷின் ஓம்! இரண்டாவது பாடல் அறிவிப்பு!
தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தைத் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
Advertisement
Advertisement
இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’அலாக்கா லோவா' சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து வெளியான மம்மூட்டி கிளிம்ஸ் விடியோவும் கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ’வீழா வீரா’ என்ற இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.
ஓம் திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் ஜெயிலர் மற்றும் சீன் திரைப்படங்களின் வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற நவ. 20 அன்று இப்படம் வெளியாகவுள்ளது.
The second song of Dhanush's film Om has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.