FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஃபுல் மூன்... ஜெயிலர் - 2 இரண்டாவது பாடல்!

ஜெயிலர் - 2 இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது...

25 செப்டம்பர் 2026, 6:11 pm IST
நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்பட பாடல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘ஃபுல் மூன்... ஃபுல் சன்..’ பாடலை வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைப்பில் ஹெய்சன்பெர்க் மற்றும் சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத்தே பாடியுள்ளார்.

A song from actor Rajinikanth's film Jailer 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments