ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!
ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியின் புதிய போஸ்டர்...
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைப்பில் நடிகை பூர்ணா நடனத்தில் உருவான இப்பாடல் இன்ஸ்டாகிராமிலும் டிரெண்டிங் ஆனது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, ஜெயிலர் - 2 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அக். 15 ஆம் தேதிதான் இப்படம் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தும் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
The release date for the movie Jailer 2, starring actor Rajinikanth, has been reconfirmed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.