அமிதாப் பச்சன் 
சினிமா

’எப்போதும் நன்றியுடன்...’ : சிகிச்சைக்கு பிறகு அமிதாப் பச்சன்!

மும்பையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

DIN

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல்கள் வெளியாகின.

81 வயதான முன்னணி திரை நடிகர் அமிதாப் பச்சன், மும்பை அந்தேரியில் பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது கால் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அமிதாப் பச்சன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “எப்போதும் நன்றியுடன்” எனப் பதிவிட்டு தான் நலமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் விரைவில் மீண்டுவர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவாடானை பகுதியில் தொடா் மழை: விவசாயப் பணிகள் மும்முரம்

பைக் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

திண்டுக்கல்லில் நாளை கல்விக் கடன் முகாம்

பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

SCROLL FOR NEXT