நடிகர் பிரபாஸ் விரைவில் மணமுடிக்கவுள்ளார். இந்தத் தகவலை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
பிரபாஸின் தந்தைவழி உறவினர்(அத்தை ஒருவர்) அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “சிவபெருமானின் ஆசி பொழியும்போது, பிரபாஸ் கல்யாணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் அவருடைய திருமணத்துக்காக முயற்சி எடுத்தும் வருகிறோம். ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறோம், சிவபெருமானின் அருளாசியால் அது விரைவில் அரங்கேறும்” என்றார்.
’தி ராஜா ஸாப்’ படத்தில் நடித்துவரும் பிரபாஸ் ’சலார்’, ‘கல்கி’ படங்களின் அடுத்தடுத்த பாகங்களிலும் நடிக்கவிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறன. இந்தநிலையில், 45 வயதைக் கடந்துவிட்ட பிரபாஸுக்கு திருமணம் விரைவில் நடக்கவிருப்பதாக அவரது உறவினம் மூலம் வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.