சினிமா

தனியே தள்ளாடிப் போகிறேனே.. விடாமுயற்சி 3-ஆவது பாடல் வெளியானது!

அஜித்தின் விடாமுயற்சி நாளை ரிலீஸ்....

DIN

அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை(பிப். 6) திரைக்கு வருகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்திலிருந்து 3-ஆவது பாடலை படக்குழு இன்று(பிப். 5) வெளியிட்டுள்ளது.

மோகன் ராஜன் எழுதியுள்ள ‘தனியே தள்ளாடிப் போகிறேனே...’ பாடலை மெலோடி ரகத்தில் இசையமைத்துப் பாடியுள்ளார் அனிருத்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் த்ரிஷா, அர்ஜுன், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், பிப். 6 படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் பிப். 6 ஆம் தேதி ஒருநாள் மட்டும், 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT