சினிமா

‘காந்தி கண்ணாடி’ - ஹீரோவாக சின்னதிரை நடிகர் பாலா! விடியோவில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

சின்னதிரை நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பெயர்...

DIN

சின்னதிரை நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புது விடியோ திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியிடப்பட்டது. ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஷெரீஃப் இயக்கத்தில் பாலா நடிக்கிறார்.

இத்திரைப்படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.

படம்| காந்தி கண்ணாடி படக் குழு

காந்தி கண்ணாடி படத்தின் முதல் க்ளிம்ஸ் விடியோவும் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. கையில் தீப்பந்தம் ஒன்றை ஏந்திக் கொண்டு பாலா நிற்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

படத்தின் உருவாக்க விடியோவைப் பார்க்கும்போது வித்தியாசமானதொரு திரைக்கதையில் பாலாவை திரையில் காட்டப் போகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. இப்படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT