சினிமா

நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்!

கராத்தே மாஸ்டரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

DIN

நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி (60) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) காலமானாா்.

ரத்த புற்று நோய் பாதிப்பு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா் ஷிஹான் ஹுசைனி. மதுரையைச் சோ்ந்த கராத்தே பயிற்சியாளரான ஷிஹான் ஹுசைனி பல திரைப்படங்களில் நடித்துள்ளாா். இயக்குநா் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அறிமுகமான இவா், நடிகா் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தாா். தொடா்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளாா். இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரா்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக திகழ்ந்தவா்.

தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகா்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனிதான்.

அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிப்பால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அவா் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டது.

தனது உடலை தானம் செய்வதாக சமீபத்தில் அவா் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷிஹான் ஹுசைனியின் உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை பிரபலங்கள் பலா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT