செய்திகள்

சந்தானம் படத்திற்கு இசையமைக்கிறார் சிம்பு!

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ள ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

DIN

சென்னை: நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ள ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளார்.

நடிகர் சிம்புவால் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகைச்சுவை நடிகர் சந்தானம். சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில்தான் சந்தானம் காமெடியனாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் 'கண்ணா லட்டு தின்னா ஆசையா?' படம் மூலம் கதாநாயகனாகவும் ப்ரோமோஷன் பெற்றார்.

தற்போது அவர் ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள வைபவி சாந்தலியா நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில்தான் சிம்பு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். நடிகர் சிம்பு ஏற்கெனவே, நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT