செய்திகள்

என்றென்றும் இளமையுடன் இருப்பது எப்படி? பிரபுதேவா பதில்

DIN

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் தேவி. தமன்னா, ஏமி ஜாக்ஸன், சோனு போன்றோரும் நடித்துள்ளார். 

பிரபுதேவா, 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் தமிழ்ப்படம் இது. இதற்கு முன்னால் 2004-ல் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவா நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இன்று வெளியாகியுள்ள தேவி படம் குறித்து பிரபுதேவா கூறியதாவது:

இந்தப் படத்தை வேறொரு கதாநாயகனைக் கொண்டுதான் இயக்குநர் விஜய் இயக்க நினைத்தார். ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. உடனே என்னை நடிக்கக் கேட்டார். எனக்கும் ஒரு பேய்ப் படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை உண்டு. அதற்கு முன்பு ஏன் அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்கக்கூடாது என்றெண்ணி நடிக்க ஒப்புக்கொண்டேன் என்கிற பிரபுதேவா அவருடைய உடல்வாகு குறித்து சொன்னதாவது: 

நான் சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். இரவு 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடமாட்டேன். மேலும் என் மனத்தை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளேன். ஆரம்பத்திலிருந்து இப்படித்தான். அதுதான் என் உடல்வாகிலும் பிரதிபலிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT