செய்திகள்

ஒரே நாளில் வெளியான மூன்று படங்களும் ஹிட்!

DIN

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய் சேதுபதி நடித்த றெக்க, விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி என மூன்று முக்கியமான படங்கள் நேற்று வெளியாகின.

வசூல் அளவில் மற்ற இரண்டு படங்களை விடவும் ரெமோ முந்திக்கொண்டது. அதிக திரையரங்குகளில் வெளியானதும் ஒரு முக்கிய காரணம். அதேசமயம் றெக்க, தேவி ஆகிய இரு படங்களுக்கும் நல்ல விமரிசனங்களும் ரசிகர்களும் ஆதரவும் கிடைத்துள்ளன.

முதல்முறையாக ஒரு பக்கா மசாலா படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தன்னுடைய பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லமுடியும். அதேபோல குறைந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த தேவி படத்துக்கு ஊடகங்களும் நல்ல விமரிசனங்கள் அளித்துள்ளன. ஒரு பெரிய திருப்பத்தை எதிர்பார்த்துள்ள இயக்குநர் விஜய், நடிகர் பிரபுதேவா ஆகிய இருவருக்கும் இது மகிழ்ச்சியான செய்தியே. இதனால் மூன்று படங்களினாலும் ரசிகர்கள் திருப்தியடைந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. 

வசூலில் ஒவ்வொரு படமும் என்ன சாதித்தது என்பது வரும் நாள்களில்தான் தெரியவரும். ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்த விமரிசனங்களை அளவுகோலாக வைத்துப்பார்க்கும்போது மூன்று படங்களுமே வெற்றியடைந்துள்ளன என்றே மதிப்பிடமுடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT