முகப்பு
செய்திகள்

நூறு கோடி வசூலைத் தாண்டிய தோனி படம்!

60 நாடுகளில், 45000 திரையரங்குகளில் வெளியான தோனி படம்...

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

60 நாடுகளில், 45000 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. 

மேலும், முதல் மூன்று நாள்களில், இந்தியா முழுக்க ரூ. 66 கோடியை வசூலித்த தோனி படம், தற்போது நூறு கோடி வசூலைத் தாண்டியுள்ளது. சமீபத்திய விடுமுறை தினங்களில் அதன் வசூல் வழக்கம்போல சிறப்பாக இருந்ததும் ஒரு காரணம். கடந்த வெள்ளி முதல் நேற்றுவரை தினமும் சராசரியாக ரூ. 4 கோடி வசூலை அடைந்துள்ளது. நேற்றுவரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சேர்த்து அதன் வசூல் ரூ. 120 கோடியைத் தொட்டுள்ளது. இந்திய சினிமாவில், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையை தோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.