சென்னை: இசையமைப்பாளர் , நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், வரும் நவம்பர் 3-ஆம் தேதி அன்று படத்தின் பாடல் வெளியீட்டின் போதே வெளியிடப்படும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராக மாறியுள்ளவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் உருவாகியுள்ளாள் படம்தான் ‘சைத்தான்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கிறார். அருந்ததி நாயர், பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இந்த படத்தின் பாடல்கள் வருகிற நவம்பர் 3-ந் தேதி அன்று வெளியிடபட உள்ளது.
இந்த நிலையில் பாடல்கள் வெளியீட்டின் போதே படத்தில் முதல் 5 நிமிட காட்சிகளை திரையிட்டு காண்பிக்க உள்ளதாக தற்போது விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். சைக்காலஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் பற்றிய ஒரு புரிதலை முதல் 5 நிமிடங்கள் கொடுக்கும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இதுபோல், ‘ராஜதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் வெளிவந்து, பாராட்டை பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.