செய்திகள்

பாகுபலி படத்துடன் 3 ஆண்டுகள் பயணித்த பிரபாஸ்!

பாகுபலி படத்தின் 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். 

DIN

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது.

ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள் முடித்துவிட்டு, உடனே அடுத்தப் படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், பாகுபலி படத்தின் 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். 

ஒரே படத்தில் 2 உடல் தோற்றங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் பட்ட கஷ்டங்கள் குறித்து அவருடைய உடற்பயிற்சியாளர் லட்சுமண் ரெட்டி கூறியதாவது: பாகுபலி பாத்திரத்துக்காக கட்டுமஸ்தான உடலும், மகன் சிவடு பாத்திரத்துக்காக சற்று இளைத்தும் அவர் தெரியவேண்டும். இதற்காகக் கடுமையாக உழைத்தார். 4 வருடங்களாக அவருடைய உடலமைப்பை மாற்றிக்கொண்டே இருந்தார். இப்படிச் செய்வது சுலபமல்ல என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

SCROLL FOR NEXT