செய்திகள்

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்

DIN

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குநர் அமீர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

கடந்த 2008ஆம் ஆண்டு, ராமேசுவரத்தில் தமிழ்த் திரையுலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, திரைப்பட இயக்குநர் அமீர் மீது ராமநாதபுரம் மாவட்டக் கியூ பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் திங்கள்கிழமை ஆஜரானார்.
விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.பி. ராம், மீண்டும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமீர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT