செய்திகள்

பாகுபலி 2: 3 மணி நேரம்!

பாகுபலி 2 படம், 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடியதாக உள்ளது.

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.

இந்நிலையில் பாகுபலி 2 படம், 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடியதாக உள்ளது. இத்தகவலை இயக்குநர் ராஜமெளலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரப் படம் என்பதால் இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்கிற கேள்வி எழுகிறது (பாகுபலி 1 படம், 2 மணி நேரம் 38 நிமிடம் ஓடியது.) மேலும் இதனால் ஒருநாளில் பல காட்சிகள் நடத்தமுடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT