செய்திகள்

வழிபாட்டுத் தளங்களில் லவுட்ஸ்பீக்கர்கள் தேவையில்லை என வலியுறுத்த மொட்டை போட்டுக் கொண்ட பாடகர்!

சரோஜினி

பாடகர் சோனு நிகம் திங்கள் அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கோயில்கள், மசூதிகள், குருதுவாராக்களில் இறைவழிபாடு என்ற பெயரில் லவுட்ஸ்பீக்கர்கள் தேவையா? அமைதி நிலவ வேண்டிய இடங்களில் இப்படி லவுட்ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துவது கூட ஒரு வகையில் மதத் திணிப்பு தான் எனும் வகையில் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதைக் கண்டு கொதித்துப் போன இஸ்லாமிய மெளல்வி ஒருவர் ‘மதத்தை இழிவு படுத்திய சோனு நிகமின் தலையை மொட்டை அடிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு பதிலடி போல இன்று சோனு நிகம் தன் தலையை தானே முன் வந்து தனது இஸ்லாமிய சிகையலங்கார நண்பர் ஒருவரின் துணையுடன் மொட்டையடித்துக் கொண்டு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். மெளல்விக்கு பதிலடியா இது? எனும் கேள்விக்கு; இல்லை என மறுத்த சோனு நிகம், தான் சொன்ன கருத்திலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை எனவும் தனது கருத்தை வலுப்படுத்தவே தனது இஸ்லாமிய சிகையலங்கார நண்பர் மூலமாகத் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டதாக சோனு தெரிவித்துள்ளார்.

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT