செய்திகள்

பாகுபலி 2 படத்துக்கு வரிச்சலுகை இல்லை. ஏன்?

ஆனால் இதுவரையிலான அசத்தலான முன்பதிவைப் பார்க்கும்போது ஒரு பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகரான வரவேற்பு...

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் -  'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது.

இந்தப் படம் தற்போது தணிக்கை செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய பாகுபலி 2, தமிழ்ப் பதிப்பில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் பாகுபலி 2 படத்துக்குத் தமிழ்நாட்டில் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் படக்குழு எதிர்பார்க்கும் வசூலில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது. 

ஆனால் இதுவரையிலான அசத்தலான முன்பதிவைப் பார்க்கும்போது தெலுங்கு, ஹிந்திப் பதிப்புகளுக்கு நிகரான வசூலைத் தமிழ்ப் பதிப்பிலும் அள்ளும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT