செய்திகள்

பாகுபலி 2 படத்தைக் கடுமையாக விமரிசிக்கும் வட இந்திய விமரிசகர்!

எழில்

இந்தியா முழுக்க பாகுபலி 2 படத்தை மக்கள் வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருக்க, வட இந்திய விமரிசகர் ஒருவர் மட்டும் அதைக் கிழி கிழி என கிழித்துள்ளார்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், நேற்று வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க இருந்து இந்தப் படத்துக்கு விமரிசனங்கள் குவிந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைவரும் படத்தை ஆஹோஓஹோ எனப் பாராட்டுகிறார்கள். இந்திய சினிமாவின் மகத்தான படம் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.

பாகுபலி 2 படத்தைக் கடுமையாக விமரிசித்து வட இந்திய விமரிசகர் கமால் ஆர் கான் (இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரும்கூட) வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறப்பட்டுள்ளதாவது:  

பாகுபலி 1 வரலாறு படைத்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். ஆனால், பாகுபலி போன்ற ஒரு குப்பைப் படம் வரலாறு படைக்கிறது. பாகுபலி 1-ன் பத்து சதவிகிதம் கூட பாகுபலி 2 இல்லை. பாகுபலி 1-ஆல் உண்டான ஆர்வத்தைக் கொண்டு மக்களை முட்டாளாக்கிவிட்டார் ராஜமெளலி. திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளோம். கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பார்க்க அல்ல.  

தென்னிந்திய மக்களின் குணாதிசயம் படத்தில் பிரதிபலித்துள்ளது. சத்தமான இசை, சத்தமான நடனம், மிகை நடிப்பு. ஹிந்தி தயாரிப்பாளர் சிலர் ஒட்டகம் போல இருக்கும் பிரபாஸைத் தங்கள் படங்களில் பயன்படுத்தினால் அவர்கள் முட்டாள்கள். பிரபாஸால் பாகுபலி செயல்படவில்லை. பாகுபலி 1 படம் தென்னிந்தியப் படங்களைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. ஆனால் பாகுபலி 2 படம் பார்த்தபிறகு இனி தென்னிந்தியப் படங்களை நிச்சயம் பார்க்கமாட்டேன்.

கமால் ஆர். கான்

பாகுபலி 2 படத்தின் ஒவ்வொரு காட்சியும் யதார்த்தத்தில் இருந்து 100 மைல்கள் தள்ளி உள்ளது. கதை, உணர்வுபூர்வமான காட்சிகள், பொழுதுபோக்கு என எதுவும் இல்லை. ஒரு கம்ப்யூட்டர் கேம் பார்ப்பதுபோல உள்ளது.

பாகுபலி 2-ன் முதல் நாள் வசூலை எந்த கான் நடிகராலும் தோற்கடிக்கமுடியாது. தீபிகா, சல்மான் அல்லது ஆமீர் கான் கூட இல்லை. கபில் டிவி நிகழ்ச்சியில் விளம்பரம் செய்யவில்லை. ரயில் பயணங்கள் செய்தும் விளம்பரம் செய்யவில்லை. விடுமுறை தினம் கூட இல்லை. இருந்தும் பாகுபலி 2, வசூலில் வரலாறு படைத்துள்ளது. 

பாகுபலியின் வசூல் சாதனை நிரூபிப்பது என்னவென்றால் வசூலை அள்ள உங்களுக்கு MughalEAzam போன்ற படங்கள் தேவையில்லை. மோசமான படங்களே வரலாறு படைக்க போதும் என்று விமரிசித்துள்ளார்.

கேஆர்கே எனப்படும் கமால் ஆர் கான் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மிகவும் புகழ்பெற்றவர் என்பதால் அவருடைய விமரிசனம் பலரையும் சென்றடைந்துள்ளது. இதனால் பாகுபலி ரசிகர்கள் தற்போது கேஆர்கே-வின் பாகுபலி ட்வீட்களுக்குக் கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT