செய்திகள்

பரணியை ஏன் தடுக்கவில்லை காயத்ரி? அதிரடியாகக் களமிறங்கியுள்ள பிந்து மாதவி!

அப்போது தலைவராக இருந்தது நீங்கள்தானே, எனில் நீங்கள்தான் அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும்...

எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகம் ஆகியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிந்து மாதவி ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகிய இருவரையும் அதற்கு அடுத்த நிலையிலும் வைத்து தன்னுடைய நடவடிக்கைகளை வெளிப்படுத்திவருகிறார்.

நேற்று தனக்குப் பிடித்த போட்டியாளர்களை வரிசைப்படுத்தப் போகிறேன் என கேமரா முன்பு மட்டும் சொன்ன பிந்து மாதவி, முதல் இடத்தை ஓவியாவுக்கு வழங்கினார். கடைசி இடங்களை காயத்ரி ரகுராம், ஜூலிக்கு வழங்கினார். இது புரியாததால் காயத்ரி ரகுராம், இந்த வரிசை குறித்து சக்தியிடம் விவாதித்ததும் ஒளிபரப்பானது.

போட்டியில் நுழையும் முன்பு கமலிடம், தனக்கு ஓவியா சவாலாக இருப்பார் என்று கூறிய பிந்து மாதவி, நாமினேஷன் பட்டியலில் வெளியேற வேண்டியவர்களாக காயத்ரி மற்றும் ஜூலியைத் தேர்வு செய்து ஆச்சர்யத்தை உண்டாக்கினார்.

இன்றைய நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமிடம், பரணி சுவரேறிக் குதித்தபோது ஏன் யாரும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை? நீங்கள் எல்லோரும் அவரைத் தனிமைப்படுத்தியதால்தான் அதுபோன்று செய்ய முயன்றார்! அப்போது தலைவராக இருந்தது நீங்கள்தானே, எனில் நீங்கள்தான் அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்கிற கேள்விகளைக் கேட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதியதொரு பரபரப்பு உண்டாகியுள்ளது.

வெளியிலிருந்து அனைத்து நிகழ்வுகளையும் பார்த்த ஒருவர் போட்டியாளராகக் களமிறங்கியுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய சுவாரசியம் உண்டாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT