செய்திகள்

படங்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு லஞ்சம் அளிக்க வேண்டிய சூழல்: பார்த்திபன்

திரைத்துறையில் படங்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு லஞ்சம் அளிக்க வேண்டிய சூழல் நிலவுவது உண்மை தான் என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.

DIN

திரைத்துறையில் படங்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு லஞ்சம் அளிக்க வேண்டிய சூழல் நிலவுவது உண்மை தான் என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.

"பொதுவாக என் மனசு தங்கம்' படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீடு நிகழ்ச்சி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் தளபதி பிரபு, நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, தனி மனித சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்தச் சுதந்திரத்தின் அளவை உணர்ந்து செயல்படும் நடிகர் கமல்ஹாசனின் செயல்பாடு ஆச்சர்யமளிக்கிறது. அரசு இடறும் இடங்களை சுட்டிக்காட்டும் அவரது துணிச்சலான கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.

அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் உள்ளது என்று ரஜினி அண்மையில் கூறினார். ரஜினி அரசியலுக்கு வருவதே ஆண்டவன் கையில் இருக்கும்போது அதை ஏன் அவரிடம் கேட்கிறீர்கள்? ஆண்டவரிடம் அல்லவா நீங்கள் கேட்க வேண்டும் என்ற நகைச்சுவை பொருள்படும்படி சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தேன். இதற்கு ரஜினி ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்தை வெளியிடவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் மீது எனக்கு தனி மரியாதை உள்ளது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை செலுத்தும் ஒரு நபருக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ரஜினி, கமல் அரசியல் தொடர்பாக பேசுவது பணத்திற்காக, சுய லாபத்திற்காக என்று சிலர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து, அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருவரும் இல்லை.

ஜிஎஸ்டி மூலம் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படங்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவது உண்மைதான், நானும் அதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறேன். இது உடனடியாக களையப்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT