முகப்பு
செய்திகள்

நான்காவது முறையாக அஜித் - சிவா இணையவுள்ளார்களா?

மூன்றுமுறை அஜித்துடன் இணைந்து படம் இயக்கியுள்ள இயக்குநர் சிவா...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

மூன்றுமுறை அஜித்துடன் இணைந்து படம் இயக்கியுள்ள இயக்குநர் சிவா, நான்காவது முறையாகவும் இணையவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித்குமாரின் 25 ஆண்டு கால திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையில், கும்பகோணத்தில் அவரின் ரசிகர்கள் ரூ. 1 லட்சம் செலவில் பைபர் மெழுகினால் செய்யப்பட்ட அஜித் சிலையை உருவாக்கினர். சிலையை ரசிகர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அஜித்குமார் சிலையை திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை டார்லிங் மற்றும் ஏராளமான அஜித் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இமான் அண்ணாச்சி பேட்டியளித்ததாவது:

விவேகம் படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித் படத்தில் நடிப்பதற்காக மீண்டும் என்னிடம் கால்ஷீட் கேட்டுள்ளார்கள். இன்னமும் இயக்குநர் சிவாவிடமிருந்து தகவல் வரவில்லை என்று கூறியுள்ளார். 

இதையடுத்து வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.