முகப்பு
செய்திகள்

செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் விக்ரம் பிரபுவின் நெருப்புடா!

இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட் என்கிற பெயரில் விக்ரம் பிரபு தயாரித்துள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

புதுமுகம் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள நெருப்புடா படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட் என்கிற பெயரில் விக்ரம் பிரபு தயாரித்துள்ளார். செப்டர் 8-ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்காக 95 சதவிகிதம் நிஜ நெருப்போடுதான் படப்பிடிப்பு நடத்தினோம். நூறு குடிசைகள் செட் போட்டு எடுத்தோம். புகையையும் மூச்சுத்திணறலையும் தாண்டி நடித்தது மறக்க முடியாது என்கிறார் விக்ரம் பிரபு. 

இந்தப் படத்தையடுத்து பக்கா எனும் படத்திலும் நடித்துவருகிறார் விக்ரம் பிரபு. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சதீஷ், சூரி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சத்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.