முகப்பு
செய்திகள்

மீண்டும் தொடங்கியது விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு: ஜனவரியில் வெளியிடத் திட்டம்!

சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டுள்ளார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் கமல். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கடைசிக்கட்டப் படப்பிடிப்பைத் தற்போது தொடங்கியுள்ளார் கமல். சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டுள்ளார்கள். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

இந்த ஒரு மாதத்தில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக்கொண்டு ஜனவரி மாத இறுதியில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட கமல் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →