செய்திகள்

‘மகாநதி’ எனும் 'நடிகையர் திலகம்' ரிலீஸ் தேதி வெளியாகிவிட்டது!

தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற

DIN

தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கு மற்றும் தமிழில் திரைப்படமாகவிருப்பது அவரது பழைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகியது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், சமந்தாவும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்கவிருப்பதும் முன்னரே வெளிவந்த செய்திகள்தான்.

இந்தப் படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முதலில் ஏற்றுக் கொண்ட கீர்த்தி சுரேஷ், இப்போது அதிலிருந்து பின் வாங்குவதாகத் தெரிகிறது. ஆனாலும், இவரை விட்டால் வேறு வழியில்லை என்பதால் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் சாவித்திரி வேடத்தில் இருக்கும் கீர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதற்கு கருத்து தெரிவித்த பலர், 'இவரா சாவித்திரி' என்று விமரிசனம் செய்யத் தொடங்கி விட்டனர். இதனால் கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் குண்டாகக் காட்டுவது என்று இயக்குநர் நாக் அஸ்வின் முடிவெடுத்துள்ளார். 

சமீபத்தில் இத்திரைப்படத்தில் அனுஷ்காவும், பிரகாஷ் ராஜும் கூட நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் 29-ல் வெளியாக இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT