செய்திகள்

கோலி - அனுஷ்கா திருமண ரகசியத்தை வெளியே கசிய விடாமல் பாதுகாத்த புகைப்படக் கலைஞர்கள்!

கடந்த ஒரு மாதமாக ஜோஸப், நோயல், ஷிவாலி ஆகியோர் (புகைப்படக் கலைஞர்கள்) வாயைத் திறக்காமல் இருந்தார்கள்...

எழில்

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

நீங்கள் சமூவலைத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் பார்த்த திருமணப் புகைப்படங்களை எடுத்த நிறுவனம் - ஸ்டோரீஸ் பை ஜோசப் ரதிக்! சமீபத்தில் நடைபெற்ற சமந்தாவின் திருமணப் புகைப்படங்களையும் எடுத்தது இந்நிறுவனம்தான். சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்நிறுவனம், கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

அனுஷ்கா, கோலிக்கு வாழ்த்துகள். உங்கள் திருமணத்தின் விருந்தினராகவும் அதைப் புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு கிடைத்தது எங்கள் பாக்கியம். இத்திருமணத்தை விடவும் இதற்கு அடுத்ததாக உள்ள அருமையான வாழ்க்கைக்கு எங்கள் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பாக வாழ்த்துகள். 

கடந்த ஒரு மாதமாக ஜோஸப், நோயல், ஷிவாலி ஆகியோர் (புகைப்படக் கலைஞர்கள்) வாயைத் திறக்காமல் இருந்தார்கள். இப்போது இதைப் பற்றி நாங்கள் பேசலாம்! நன்றி கடவுளே. என்ன ஓர் அருமையான வருடம் என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT