செய்திகள்

எகிப்திய படத்தின் தழுவலா அருவி படம்? சமூகவலைத்தளங்களில் பரபரப்பு!

அஸ்மா படத்தை காப்பியடித்து இயக்குநர் அருண் பிரபு, அருவி படத்தை உருவாக்கியுள்ளதாக விமரிசனங்கள் எழுந்துள்ளன...

எழில்

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அருவி படம் எகிப்திய படத்தின் தழுவல் என்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2011-ல் வெளியான எகிப்திய படம் அஸ்மா (Asmaa)வின் கதையும் அருவி படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். அஸ்மா படத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக தன்னுடைய நோய் குறித்து வெளியுலகுக்குச் சொல்கிறாள். அருவி படத்திலும் அதேபோன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவே கதாநாயகி தன்னுடைய நோய் குறித்த விவரங்களை வெளியிடுகிறாள். இதனால் அஸ்மா படத்தின் மையமும் அருவி படத்தின் மையமும் ஒன்றாக இருப்பதால் அஸ்மா படத்தை காப்பியடித்து இயக்குநர் அருண் பிரபு, அருவி படத்தை உருவாக்கியுள்ளதாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. 

அஸ்மா படத்தின் கருவைத் தவிர இதரக் காட்சிகளுக்கும் அருவி படத்தின் காட்சிகளுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் எகிப்தியப் படத்தின் தழுவல் என்கிற உண்மையைச் சொல்லாமல் விட்டதைப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எயிட்ஸ் தொடர்பான கதையை விடவும் இரு படத்துக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள். இதுதான் அருவி படத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

அருவி படத்தில் விஜய்யைக் கிண்டலடித்து வசனம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் கிண்டல் செய்துள்ளார்கள். இதனால் அருவி படத்தைப் பலர் எதிர்க்க இது ஒரு வாய்ப்பாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டாலும் பட இயக்குநர் இக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT