செய்திகள்

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தோல்வி!

எழில்

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் அருள்பதி மீண்டும் வெற்றியடைந்து தலைவராகியுள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை ஒருங்கிணைத்த விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த முறை நிர்வாகத்தைக் கவனித்து வந்த பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, 2017 - 19-ஆம் ஆண்டுகளுக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் அண்ணாசாலை மீரான் சாகிப் தெருவில் உள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. 

இரு முனைப் போட்டி: கடந்த முறை நிர்வாகப் பொறுப்பில் இருந்த அருள்பதி இந்த முறையும் தலைவர் பதவிக்கு போட்டிட்டார். இவருக்கு எதிராக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தலைமையில் மற்றொரு அணி போட்டியிட்டது. துணைத்தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு இரு அணிகளிலும் போட்டி நிலவியது. 

வாக்குரிமை உள்ள 524 பேரில் 469 பேர் வாக்களித்தார்கள். வாக்குப் பதிவு முடிந்ததும், நேற்றிரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்தமுறை தலைவராக இருந்த அருள்பதி இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவருக்கு 248 ஓட்டுக்கள் கிடைத்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 194 ஓட்டுக்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார். இணைச் செயலாளர் பதவிக்கு மட்டும் ஞானவேல்ராஜா அணியைச் சேர்ந்த ஸ்ரீராம் வெற்றி பெற்றுள்ளார். இதர அனைத்து பதவிகளுக்கும் அருள்பதி தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே வெற்றியடைந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT