செய்திகள்

'அறிவில்லாதவர்' என அமெரிக்க அதிபரை விமர்சித்த நடிகர் சித்தார்த்! 

பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவரை 'அறிவில்லாதவர்;' என்று நடிகர் சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.

DIN

சென்னை: பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவரை 'அறிவில்லாதவர்;' என்று நடிகர் சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்பொழுது கடுமையான உறைபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு குளிர் குறைந்தால் நன்றாக இருக்கும் என்ற பொருளில், அமெரிக்க அதிபர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டார். ஆனால் அதில் அவர் பருவநிலைமாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் குறித்த புரிதலின்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன.   

இதனை விமர்சித்து நடிகர் சித்தார்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ட்ரம்பின் டிவிட்டர் பதிவினைப் பகிர்ந்ததுடன், ட்ரம்பினை "அறிவே இல்லாத தத்தி முண்டம்" என்று மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். 

சித்தார்த்தின் இந்த கருத்திற்கு டிவிட்டர் பயனாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT