செய்திகள்

ஆக்டிங் எல்லாம் அப்புறம்... இப்போ ஆர்கிடெக்ட் பரீட்சை இருக்கு! நிவேதா தாமஸ்!

அதற்காக உடனே நிவேதா நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டார் என்று அர்த்தமில்லை. பரீட்சை எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் நடிப்பேன் என்கிறார்.

சரோஜினி

நிவேதா தாமஸ்... சமீபகாலமாக டோலிவுட் அறிமுகங்களில் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகத் திகழ்கிறார். நானியுடன் ஜென்டில் மேன் நின்னுக்கோரி, ஜூனியர் என் டி ஆருடன் ஜெய் லவகுசா என்று ஹாட்ரிக் அடித்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தவர் திடீரென புதிதாக வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரிக்கத் தொடங்கி இருக்கிறார். காரணம் அவரது ஆர்கிடெக்சர் படிப்பு மற்றும் பரீட்சையை முன்னிட்டு என்கிறார்கள். என்ன தான் நடிகை என்றாலும் நிவேதாவின் பெற்றோருக்கு மகள் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் முதல் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றுவது தான் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கும் உகந்தது என்பதால் நிவேதா இப்போதைக்கு நடிக்க இயலாது என சில திரைப்படங்களை ஒப்புக் கொள்ளவில்லையாம். அதற்காக உடனே நிவேதா நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டார் என்று அர்த்தமில்லை. பரீட்சை எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் நடிப்பேன் என்கிறார்.

நடிப்பு முக்கியம் தான், அதை விடப் படிப்பும் முக்கியம் தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT