முகப்பு
செய்திகள்

என்னால் இதில் நடிக்கமுடியாது என்றுதான் முதலில் தோன்றியது: 'அதே கண்கள்' ஷிவதா பேட்டி!

முதல்நாள் படப்பிடிக்குப் பிறகு எனக்குத் திருப்தியாக இல்லை.... 

Updated On : 1 பிப்ரவரி, 2017 at 12:31 PM
பகிர்:

சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணுவர்தனின் உதவியாளர் ரோஹின் வெங்கடேசன் எழுதி இயக்கிய படம் 'அதே கண்கள்'. கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா நாயர் நடித்துள்ளார்கள். கடந்த வாரம் வெளியான இப்படத்தில் நடிகை ஷிவதாவுக்கு அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

இப்படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை ஷிவதா கூறியதாவது:

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளை நேரில் சென்று பார்த்துவிட்டு ஊர் திரும்பியுள்ளேன். எனக்காக ரசிகர்கள் விசில் அடிக்கிறார்கள். என்னைப் பார்த்து அதே கண்கள் ஷிவதா என்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

Advertisement

கதை கேட்கும்போது எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. என் கதாபாத்திரத்தை இயக்குநர் ரோஹின் விவரித்தபோது என் நம்பிக்கை இன்னும் பலமானது. அதேசமயம் கொஞ்சம் தயக்கமும் இருந்தது. பிறகுதான் யோசித்தேன். இத்தனை வருடம் கழித்தும் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் புகழ்பெற்றதாக இருந்தது. அதனால் நான் வில்லியாக நடிப்பதிலும் தவறு ஏற்படக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன். 

முதல்நாள் படப்பிடிக்குப் பிறகு எனக்குத் திருப்தியாக இல்லை. கேரவன் உள்ளே சென்று என் அம்மாவிடம், என்னால் இதைச் செய்யமுடியுமா என்று தெரியவில்லை என்றேன். ஆனால் இயக்குநர் ரோஹின் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். கதாபாத்திரத்தை ஈடுபாட்டுடன் நடிக்கச் சொன்னார். அந்த ஊக்கம் எனக்கு உதவியாக இருந்தது.

இதற்கடுத்ததாக இதேபோல கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும் என்றும் தெரியும். ஆனால் ஒரேமாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய எனக்கு விருப்பமில்லை. எதிர்மறைக் கதாபாத்திரங்களையே செய்யமாட்டேன். எனக்குக் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.