அம்மா இரங்கல் பாடல் எழுதிய கவிஞரின் சினிமா வாழ்க்கை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக வெளியிடப்பட்ட அம்மா இரங்கல் பாடல் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக வெளியிடப்பட்ட அம்மா இரங்கல் பாடல் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஜிப்ரான் இசையில் 'அமரகாவியம்' படத்தில் அஸ்மின் எழுதிய 'தாகம் தீர கானல் நீரை பாடலுக்காக எடிசன் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுப் பாடலாசிரியர் விருதினைப் பெற்றவர்.
கவிஞர் அஸ்மின் பாடல் எழுதி மிக விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம், 'கரிச்சான் குருவி''. பிரபுதேவா நடித்த ராசையா, விவேக் நடித்த 'நான்தான் பாலா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வம்சம், எத்தன் போன்ற படங்களுக்கு இசையமைத்த தாஜ்நூர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கரிச்சான் குருவி படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 'ஏஞ் சண்டாளனே' எனத்தொடங்கும் பாடலை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். ஏனைய பாடல்களை அமரர் அமர நா. முத்துக்குமார், தனிக்கொடி, தமயந்தி, மீனாட்சி சுந்தரம், கலீல் ஆகியோர் எழுதியுள்ளனர். அஸ்மின் எழுதிய ‘சண்டாளனே’ பாடல், இசை வெளியீட்டுக்கு முன்பாகவே வெளியிடப்படுகிறது. இந்தப்பாடலை வேல் முருகன் மற்றும் ஆழா ஆகியோர் பாடியுள்ளனர்.
Advertisement
இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் சரணவனன் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக 'டூரிங்ஸ் டாக்கிஸ்' படத்தில் நடித்த சுனு லட்சுமி நடித்துள்ளார். அவர்களோடு 'நண்டு' ஜெகன், கோவை சரளா, செண்ட்டராயன், டி.பி கஜேந்திரன், ஆர்.வி உதயகுமார், 'நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது.