செய்திகள்

கதாநாயகி ஆனார் 'டப்ஸ்மேஷ்' மிருணாளினி: தயக்கம் உடைந்தது எப்படி?

என் குடும்பத்தில் யாரும் சினிமாத்துறையில் கிடையாது. பெற்றோர் சம்மதம் அளித்தால்...

எழில்

டப்ஸ்மேஷ் என்பது சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்பாகும். அதில் ஈடுபட்டு புகழ்பெற்றவர்களில் முதன்மையானவர் பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி. அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து வந்த மிருணாளினி தற்போது நகல் என்கிற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. முன்னணி இயக்குநர்கள் நடிக்க அழைத்துள்ளார்கள். ஆனால் என் அப்பா - அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிப்பதில் இஷ்டமில்லை. என் குடும்பத்தில் யாரும் சினிமாத்துறையில் கிடையாது. பெற்றோர் சம்மதம் அளித்தால் நான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு உருவாகலாம். இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது என்று முதலில் பதிலளித்த மிருணாளினி தற்போது நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

நகல் படத்தை இயக்கும் சுரேஷ் குமாருக்கும் இது முதல் படம்தான். படத்தில் மிருணாளினி கதாபாத்திரம் மட்டுமே மையக் கதாபாத்திரம். படத்தில் வேறு கதாபாத்திரங்கள் கிடையாது. இதனால் இதுபோன்ற ஒரு படம் தனக்கு நல்ல அறிமுகத்தைத் தரும் என்று நம்பி சம்மதம் அளித்துள்ளார். மேலும் காதல் காட்சிகளில் நடிக்கவும் கிளாமராகத் தோன்றவும் தேவையில்லை என்பதாலும் பெற்றோரின் சம்மதத்துடன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் மிருணாளினி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT