முகப்பு
செய்திகள்

சிங்கம் 3 சூப்பர் ஹிட்: இயக்குநர் ஹரிக்கு டயோட்டா காரைப் பரிசளித்த சூர்யா!

வெளியான சில நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதால் இதனால் குஷியான...

Updated On : 15 பிப்ரவரி, 2017 at 11:08 AM
பகிர்:

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்து வெளியான படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளியானது. 

மற்ற இரு பாகங்களைப் போல இந்தப் படமும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெளியான சில நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதால் இதனால் குஷியான நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரிக்கு டயோட்டா ஃபார்சூனர் காரைப் பரிசாக அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.