செய்திகள்

திரைப்படத்  தலைப்பாகும் ரஜினியின் புகழ்பெற்ற வசனம்! 

ரஜினியின் புகழ்பெற்ற திரைப்பட வசனம் ஒன்று தயாராகி வரும் புதிய படம் ஒன்றுக்கு தலைப்பாக சூட்டப்பட்டுள்ளது. 

DIN

சென்னை: ரஜினியின் புகழ்பெற்ற திரைப்பட வசனம் ஒன்று தயாராகி வரும் புதிய படம் ஒன்றுக்கு தலைப்பாக சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவைப்பொறுத்த வரை பிரபல பாடல்களின் பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. அதேபோல பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அந்த வரிசையில் பழைய படங்களில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வசனங்களும் தற்போது படத் தலைப்பாகி வருகின்றன.

அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், 'சதுரங்க வேட்டை' திரைப்படப் புகழ் நாயகன் நடராஜ் நடிக்கும் படத்திற்கு 'கெட்ட பையன் சார் இவன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிகாந்த் பேசிய 'கெட்ட பையன் சார் இந்தக் காளி' என்ற வசனத்திலிருந்து சிறு மாற்றத்துடன் படத் தலைப்பாகியுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தராராஜனின் மகனாவார்.  இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்-யிடம் 'தாண்டவம்', 'தலைவா',  'சைவம்' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவராவார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் ஏ.எச்..காஷிஃப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT