கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா நடித்துவரும் படம், எனை நோக்கி பாயும் தோட்டா. தர்புகா சிவா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் லிப் டூ லிப் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது:
இந்தப் படத்தில் உதடோடு உதடு சேர்த்து முத்தமிடும் சில காட்சிகள் உள்ளன. அவை மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளில் நடிக்க தனுஷுக்கு செளகரியமாக இல்லை. ஆனால் நடிகை மேகா இந்தக் காட்சிகள் சிறப்பாக வர உதவினார். மேகா சரியான ஒத்துழைப்பு கொடுத்ததால் தனுஷுக்கு அக்காட்சிகளில் நடிப்பதில் சிரமம் இல்லாமல் இருந்தது. இல்லாவிட்டால் அக்காட்சிகளைப் படமாக்கச் சிரமப்பட்டிருக்கவேண்டும் என்று கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.