செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் நடிகைகள் யார் யார்?

எழில்

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தவருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு சென்னையில் இன்று மௌன போராட்டம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே ஜல்லிக்கட்டு ஆதரவாகப் பல நடிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். ஆனால் நடிகைகளில் வெகுசிலரே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள். 

ட்விட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த தமிழ் நடிகைகள் சிலர்:

கெளதமி, ஸ்ரீப்ரியா, குஷ்பு, மடோனா செபாஸ்டியன், நிவேதா பெத்துராஜ், ஜனனி ஐயர், சாந்தினி, அஞ்சனா கீர்த்தி (சென்னை 28-2).

பீட்டா அமைப்பின் வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்களின் பட்டியல் உள்ளது. அதில் இடம்பெற்ற திரையுலகப் பிரபலங்களில் சிலர்: 

ஏமி ஜாக்சன், சோனு சூத், வித்யுத் ஜமால், சோனாக்‌ஷி சின்ஹா, பிபாசா பாசு, ரவீனா டாண்டன், வித்யா பாலன்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT