செய்திகள்

புதிய பாடல்கள் வரிகளுடன் ஏ.ஆர். ரஹ்மானின் டேக் இட் ஈசி ஊர்வசி பாடல்! (வீடியோ)

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த படம் - காதலன். இதில் இடம்பெற்ற பாடல் - டேக் ஈசி ஊர்வசி.

எழில்

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த படம் - காதலன். இதில் இடம்பெற்ற பாடல் - டேக் ஈசி ஊர்வசி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் அன்று மிகவும் புகழ்பெற்றது. இப்போது சமகாலத்துக்கு ஏற்றவாறு புதிய வரிகளுடன் மேடையில் பாடுவதற்காக ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றித்தரவேண்டும். ஆனால் நடந்துமுடிந்த அமெரிக்கத் தேர்தல், ஹிலாரி கிளிண்டன், ட்ரம்ப், ரூபாய் நோட்டு விவகாரம் போன்றவற்றை முன்வைத்து வரிகள் இருக்கக்கூடாது. சுவாரசியமாக, நகைச்சுவையாக, மூலப் பாடலின் தரத்துக்கு இருக்கவேண்டும் என்று ஃபேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஆயிரக்கணக்கான பேர் பதில் அளித்திருந்தார்கள். 

தனது பிறந்தநாளன்று போட்டியின் முடிவை அறிவித்தார் ரஹ்மான். அவர் தேர்வு செய்த வரிகள்: 

பெல்ட் போட்டு வேஷ்டி அவுந்தா டேக் ஈசி ஊர்வசி; 
ஹெல்மெட் போட்டும் மாமா பிடிச்சா டேக் ஈசி ஊர்வசி; 
கடலை நடுவில் பேட்டரி தீர்ந்தா டேக் ஈசி ஊர்வசி
; கிழிஞ்ச பேண்ட்டை ஃபேஷன்னு சொன்னா டேக் ஈசி ஊர்வசி...

இந்த வரிகளுடனான புதிய பாடலைக் கேட்கத் தயாராக இருங்கள் என்றும் ரஹ்மான் அறிவித்தார். 

அதன்படி, பாடலின் புதிய வடிவத்தை அவர் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT