செய்திகள்

இனி பீட்டா நிகழ்ச்சிகளில் த்ரிஷா பங்கேற்க மாட்டார்!

பீட்டா விளம்பரத் தூதுவராக த்ரிஷா செயல்பட்டது கிடையாது என த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்...

DIN

நடிகை த்ரிஷாவின் சுட்டுரை ("ட்விட்டர்') கணக்கு "ஹேக்' (முடக்கம்) செய்யப்பட்டதாக, அவரது தாய் உமா கிருஷ்ணன் போலீஸில் புகார் அளித்தார்.

பீட்டா அமைப்பின் ஆதரவாளராக த்ரிஷா இருப்பதாகவும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவர் சுட்டுரையில் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே த்ரிஷா பங்கேற்ற திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

சுட்டுரையில் கடைசியாக த்ரிஷா தெரிவித்த கருத்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அந்த கருத்து பதிவிடப்பட்டுள்ளது. இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். த்ரிஷா படப்பிடிப்புக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார்.

இப்போது முழு ஈடுபாட்டுடன் இல்லை: 6 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்கள் குறித்து பீட்டா எடுத்த விழிப்புணர்வு பிரசாரத்தில் த்ரிஷா பங்கேற்றார். ஆனால், அதன் பின்னர் அவர் பங்கேற்கவில்லை. இனி பீட்டா நிகழ்ச்சிகளில் த்ரிஷா பங்கேற்க மாட்டார். அதன் விளம்பரத் தூதுவராக திரிஷா செயல்பட்டது கிடையாது. ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு இல்லை: த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு அல்ல. ஆதரவானவர்தான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

ரிஷ்ய சிருங்கர் வழிபட்ட ரிஷப வாகனன்!

கடன் தொல்லை போக்கும் நரசிம்மர்!

SCROLL FOR NEXT