செய்திகள்

ரிலீஸூக்கு முன்பே லாபம் பார்த்த சிங்கம் 3! 300 கோடி வசூலுக்குத் திட்டம்!

இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள...

DIN

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்துள்ள படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளிவரும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரீம் ஃபேக்டரியைச் சேர்ந்த சக்தி வேலன், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 

சி 3 படம் வேகமாகச் செல்லும் காட்சிகள் கொண்ட படம். இது வெளியீட்டுக்கு முன்பே லாபத்தைப் பார்த்துவிட்டது. உலகம் முழுக்க ரூ. 100 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அதிக விலைக்கு விற்கப்பட்டு லாபம் பார்க்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் நிச்சயம் ரூ. 200 கோடியைத் தொடும். கடவுளின் அனுக்கிரம் இருந்தால் ரூ. 300 கோடி வசூலும் சாத்தியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2016-ஆம் ஆண்டு கொள்ளை வழக்கு: ஜாமீனில் தலைமறைவானவா் கைது

குழந்தைகள் உடல்நிலை பாதித்தால் சுயமருத்துவம் கூடாது: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்

தில்லியில் 11 வயது சிறுமியைக் கொலை செய்ததாக இளைஞா் கைது

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இலங்கையில் ராஜபட்ச கட்சி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT