சென்னை: ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு நன்றி என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்
உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'நேற்று, இன்று, நாளை’ என்கிற பெயரில் உலகளாவிய இசை சுற்றுப்பயணம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ல் லண்டனில் நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சிலர், நிகழ்ச்சியியலிருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவமானது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
அவரது சகோதரி ரைஹானா இதுகுறித்து உரிய விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனது ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு எனது நன்றி.
எனது ரசிகர்களுக்கு என எப்பொழுதும் சிறப்பானவற்றையே வழங்க நேர்மையான முறையில் முயற்சிக்கிறேன்.
இவ்வாறு ரஹ்மான் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.