செய்திகள்

‘மீசைய முறுக்கு’ தொலைக்காட்சி உரிமையைப் பெற்ற சன் டிவி!

எழில்

ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த வாரம் வெளியான படம் - மீசைய முறுக்கு. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக மட்டும் நடிக்கவில்லை. கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் எனப் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். ஆத்மிகா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் இப்படத்தயாரிப்பாளரும் இயக்குநருமான சுந்தர்.சி கூறியதாவது:

நகரங்களில் மட்டும்தான் மீசைய முறுக்கு நல்ல வசூல் பெறும் என நினைத்தோம். ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலைப் பெற்று படம் ஹிட் ஆகியுள்ளது. முதல் 250 திரையரங்குகளில்தான் படத்தை வெளியிட்டோம். இப்போது அந்த எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. கேரளாவில் திரையரங்குகள் கிடைக்க முதலில் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்து நிறைய அழைப்புகள் வருகின்றன. நானும் நிறைய படங்கள் இயக்கியுள்ளேன். நடித்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு வெற்றியைச் சந்தித்ததில்லை. கடந்த வாரம் வெளியான மீசைய முறுக்கு, விக்ரம் வேதா ஆகிய இரு படங்களும் மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளது. நல்ல படம் வந்தால் எவ்வளவு செலவானாலும் திரையரங்குகளுக்கு வருவோம் என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள். ஜிஎஸ்டி போல எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது என்றார்.

இதையடுத்து, சுந்தர். சி-யின் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீசைய முறுக்கு படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT