செய்திகள்

ஏ.ஆர். முருகதாஸின் ஸ்பைடர்: பூம் பூம் பாடலின் டீசர்!

எழில்

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள். செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று படம் வெளிவருகிறது.

ஸ்பைடர் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. ரூ. 25 கோடிக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பைடர் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பூம் பூம் பாடல் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT