செய்திகள்

இந்தியாவில் பாகுபலி 2 (ஹிந்தி) நிகழ்த்தியுள்ள அரிய சாதனை!

இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது.

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2-வின் வசூல் கடந்த புதன்கிழமையுடன் இந்தியாவில் ரூ. 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து பாலிவுட் விமரிசகர் தாரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:

இந்தியாவில் பாகுபலி 2 (ஹிந்தி) படம் நிகழ்த்திய சாதனைகள்

ரூ. 100 கோடி: 3-வது நாள் 
ரூ. 200 கோடி: 6-வது நாள் 
ரூ. 300 கோடி: 10-வது நாள்
ரூ. 400 கோடி: 15-வது நாள்
ரூ. 450 கோடி: 20-வது நாள்
ரூ. 475 கோடி: 24-வது நாள்
ரூ. 500 கோடி: 34-வது நாள்

பாலிவுட்டில் சாதனை நிகழ்த்திய படங்கள்

முதல் ரூ. 100 கோடி படம்: கஜினி (2008)
ரூ. 200 கோடி: 3 இடியட்ஸ் (2009)
ரூ. 300 கோடி: பிகே (2014)
ரூ. 400 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
ரூ. 500 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT