முகப்பு
செய்திகள்

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு! தம்பி கார்த்தி நடிக்கிறார்!

சூர்யா, முதன்முதலில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற படத்தை தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’

Updated On : 9 ஜூன், 2017 at 2:32 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:12 PM

சூர்யா, முதன்முதலில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற படத்தை தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். அந்த படம் ஓரளவு நல்ல பெயர் மற்றும் வசூல் கொடுத்ததை அடுத்து ‘பசங்க 2’ என்ற படத்தையும் தயாரித்து தான் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் என்பதையும் சூர்யா நிரூபித்தார். அவரது 3வது தயாரிப்பு '24’ வெற்றி பெற்றது. நான்காவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பிரம்மா இயக்கத்தில்  'மகளிர் மட்டும்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

தற்போது சூர்யாவின் அடுத்த தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள 'செம' படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது ராஜ்சேகர் பாண்டியன் சூர்யாவின் புதிய படத்தைப் பற்றிய செய்தியை மீடியாவுக்குத் தெரிவித்தார். 

தற்போது கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' எனும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் இன்னும் தலைப்பிடப்படாத பாண்டிராஜ் படத்தில் நடிப்பார். சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடக் கடைசியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.